சாத்தூரில் சமத்துவ பொங்கல் விழா

சாத்தூர், ஜன. 13:  சாத்தூரில் அமிர்தா பவுண்டேசன் மற்றும் மக்கள் சேவை இளைஞர் இயக்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமிர்தா பவுண்டேசன் தலைவர் உமையலிங்கம் தலைமை வகித்தார். மைய நிர்வாகி சரண்யா வரவேற்புரை ஆற்றினார். ஜே.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து கரும்புகள் வழங்கப்பட்டன.  பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, ஓவியம், ரங்கோலி ஆகிய தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தேசத்தலைவர் கொடிகாத்த குமரன் நினைவு தினம், சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இறுதியில் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியை மீனா நன்றி கூறினார். இதில் அமிர்தா பவுண்டேசன் நிர்வாகிகள், மக்கள் சேவை இளைஞர் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>