×

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

தேனி, ஜன. 13: தேனி மாவட்ட இந்து முன்னணி இளைஞர் பிரிவு சார்பில், பெரியகுளம் சாலையில் உள்ள பெத்தாட்சி விநாயகர்கோயில் அருகே, சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் ராமராஜன் முன்னிலை வகித்தனர்.

இதையொட்டி விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நகர பொறுப்பாளர்கள் ராம்கண்ணன், செல்வம், ஒன்றியத்தலைவர் திலகராஜ், ஒன்றியப் பொதுச்செயலாளர் குமார் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி பஸ்நிலையத்தில் இந்து முன்னணி இளைஞர் முன்னணி சார்பில், விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags : Vivekananda Birthday Celebration ,
× RELATED விவேகானந்தர் பிறந்த நாள் ெகாண்டாட்டம்