×

மினி கிளினிக்குகள் திறப்பு

தேனி, ஜன. 13: தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சீலையம்பட்டி, தர்மாபுரி, குப்பிநாயக்கன்பட்டி,  வெங்கடாசலபுரம், தாடிச்சேரி, அரண்மனைப்புதூர் ஆகிய 6 ஊராட்சிகளில் தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார்.
இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மினி கிளினிக்குகளை திறந்து வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியின்போது கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் ப்ரிதா,  தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Opening ,Mini Clinics ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா