×

தனது கள்ளக்காதலியிடம் பழகியதால் இன்ஜினியரை கொலை செய்த கொத்தனார் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

போடி, ஜன. 13: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள கீழச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (25). டிப்ளமோ முடித்த இவர், பெங்களூரு கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். அங்கு ரவிக்குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 10ம் தேதி இரவு சில்லமரத்துப்பட்டிஅம்மாபட்டி இடையே வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஒண்டிவீரன் புகாரின் பேரில், போடி புறநகர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் தேனியில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், போடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார், இது தொடர்பாக போடி அருகே உள்ள அம்மாபட்டி காலனியைச் சேர்ந்த முருகன் மகன் பிரபுவை (25) கைது செய்து விசாரித்தனர். பிரபு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் கொத்தனார் வேலை செய்கிறேன். கீழச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த உறவினர் பெண், என்னுடன் சித்தாள் வேலைக்கு வந்தார். அவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, 3 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில், சித்தாள் வீட்டிற்கு எதிரில் உள்ள உறவினர் ஒண்டிவீரன் மாமா ஆவார். அவரது மகன் ரவிக்குமார், அவரது வீட்டை இடித்துவிட்டு, புதுவீடு கட்டும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். நானும் சித்தாளும் பணிக்குச் சென்றோம். சித்தாள் ரவிக்குமாருக்கு அண்ணி முறை என்பதால், அவருடன் நெருக்கமாக பழகினார். இதனால், சித்தாளை கண்டித்தேன். ரவிக்குமாருடன் பழகுவதை நிறுத்து, இல்லாவிட்டால் விபரீதம் ஏற்படும் எச்சரித்தேன். ஆனால், அவர்களின் நட்பு தொடர்ந்தது.

இதனால், ஆத்திரமடைந்து ரவிக்குமாரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். கடந்த 10ம் தேதி இரவு டாஸ்மாக் கடைக்கு ரவிக்குமாரை அழைத்துச் சென்று, அவருக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்தேன். நான் குடிப்பது போல நடித்தேன். முன்னதாக சில்லமரத்துப்பட்டிஅம்மாபட்டி இடையே இரண்டு புளியமரங்களில் அரிவாள்களை மறைத்து வைத்தேன். இரவு நீண்ட நேரம் வரை குடித்துவிட்டு, இருவரும் நடந்து வந்தோம். சந்தேகம் ஏற்படாதவாறு ரவிக்குமாருடன் சகஜமாக சிரித்துப் பேசி வந்தேன். முதல் புளியமரத்தில் ஒழித்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்ட முயன்றேன் குறி தப்பியது. பின்னர் வெளியே போய் வருகிறேன் நீ போ என கூறிவிட்டு, இரண்டாவது புளியமரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ரவிக்குமாரின் கழுத்தில் வெட்டினேன். அதில் கீழே விழுந்த அவரை முகம், வாய், கை ஆகிய பகுதிகளில் வெட்டி கொலை செய்துவிட்டு, மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பினேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : engineer ,murder ,police investigation ,Kothanar ,
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்