காரைக்குடி தனி மாவட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, ஜன.13:  காரைக்குடியை மாநகராட்சியாக்க வேண்டும், தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மக்கள் மன்ற தலைவர் ராசகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அமமுக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, நகர செயலாளர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சகுபர், ஆம் ஆத்மி அரசுசோமன், சமூக ஆர்வலர்கள் தமிழ்கார்த்தி, நசீர், கனிமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் மன்ற செயலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Related Stories:

>