×

கோவையில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டம்: கிராம மக்களே திரண்டு யானைகளை விரட்டினர்

கோயம்புத்தூர்: கோவை குப்பனூர் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தை கிராம மக்களே ஒன்று கூடி விரட்டினர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக யானைகளை பொறுத்தளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமானவை உள்ளது. இவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் அவ்வப்போது வெளியேவந்து விளைநிலங்களுக்கு சென்று தங்களது தேவையான உணவு, நீர் உள்ளிட்ட ஆதாரங்களை எடுத்து செல்லவது கோடைகாலங்களில் வழக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில், நேற்றியை தினம் நள்ளிரவு தொண்டாமுத்தூர் உட்பட்ட குப்பனூர் பகுதிக்குள் சுமார் 6 யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி வந்திருக்கிறது. அப்போது அதை பார்த்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் யானைகள் கூட்டம் மெல்ல மெல்ல குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து உள்ளே வந்ததை அடுத்து, அதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினர் வருவதற்கு முன்பாகவே தங்களது டிரக்ட்டர் உள்ளிட்ட வாகனகளை எடுத்து யானைங்களை விரட்டினர். அந்த யானைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை நோக்கி வேகமாக ஓடி வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த நிலையில், யானைகள் அந்த பகுதிக்கு வந்த போது வேலுச்சாமி என்பவர் தோட்டத்தில் இருந்த வேலிகளையும், தண்ணீர் பாச்சக்கூடிய உபகரணகள், தென்னை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதற்கு உண்டான இழப்பீட்டை அரசு வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் தற்போதைய காலகட்டங்களில் கூட்டக்கூட்டமாக வனப்பகுதிகளுக்குள் இருந்து வெளியேவருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் கூடுதலாக குழு அமைத்து யானைகள் வராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரக்கூடிய யானைகளை விரைந்து விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coimbatore ,Kuppanur ,Western Ghats ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...