சிகரெட் பற்ற வைத்த பெயிண்டர் சாவு

தொண்டி, ஜன.13: தொண்டி அருகே புகை பிடிப்பதற்காக தீப்பெட்டியை பற்ற வைக்கும் போது கையில் வைத்திருந்த தின்னர் பாட்டிலில் தீப்பிடித்து பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை பெருங்குளத்தை சேர்ந்தவர் ஸ்டாலின்(55). இவர் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். கடந்த 24ம் தேதி பெயிண்டிங் வேலைக்கு தின்னர் வாங்கி கொண்டு புல்லூர் பஸ் ஸ்டாப்பில் நின்று சிகரெட் புகைப்பதற்ககாக தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்தார். அப்போது கையில் இருந்த தின்னர் பாட்டிலில் தீ பிடித்து உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.   நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>