அனுமன் ஜெயந்தி விழா

பேரையூர்: டி.கல்லுப்பட்டி அருகேயுள்ளது நல்ல மரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கும்பபூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட 11 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. வெளியூர் மற்றும் உள்ளுர், பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் ராமபிரானை வேண்டி தவநிலையில் காட்சியளித்தார்.

Related Stories:

>