3 கொள்ளையர் கைது

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 3 மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும், மாஸ்க் அணிந்து, அதன்மேல் கைக்குட்டையை கட்டியிருந்தனர். வீட்டிற்குள் நுழைந்த இவர்கள், மிரட்டி, வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். வீட்டிலிருந்தவர்கள், திருடன், திருடன் என சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, மூவரையும் பிடித்து தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கருப்பாயூரணியை சேர்ந்த அழகர்(42), கதிர்வேல்(34),நாகராஜ்(39) என தெரிந்தது. 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>