×

பட்டிவீரன்பட்டி அருகே மக்கள் கிராம சபை

பட்டிவீரன்பட்டி, ஜன. 13: ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தேவரப்பன்பட்டியில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. மாநில துணை பொது செயலாளரும், எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி பேசியதாவது: வரும் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுகவை நிராகரிக்காவிட்டால் மின்வாரியம் தனியார் மயமாகிவிடும். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரிக்கப்படும்.  அதேபோல் முதியோர் உதவித்தொகை கடந்த திமுக ஆட்சியில் தந்ததுபோல் 60 வயதை கடந்த அனைவருக்கும் தபால் துறையினர் மூலம் வீடுதேடி வரும். மத்தியில் ஆளும் பாஜக அரசு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் விரோதபோக்கை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய தேவையான சிலிண்டர் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து திட்டங்களும் வீடுதேடி வரவுள்ள மக்கள் விரும்பும் திமுக ஆட்சி தமிழகத்தில் விரைவில் அமையும்’ என்றார். இதில் எம்பி வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஹேமலதா, கிழக்கு மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் தங்கராஜ், தலைமை கழக பேச்சாளர் போஸ், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Village Council ,Pattiviranapatti ,
× RELATED குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்