×

கொத்தப்புள்ளி பூவோடையில் மழைநீரில் மூழ்கிய ரயில்வே சுரங்க பாதை எம்பி ஆய்வு

சின்னாளபட்டி, ஜன. 13: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப்புளி ஊராட்சிக்குட்பட்டது பூவோடை. இதனருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைதான் தேவர்மலை, ஜக்காலம்மன்பட்டி உள்பட பல கிராமங்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ளது. சிறுமழை பெய்தால்கூட இந்த சுரங்க பாதையில் தண்ணீர் குளம்போல் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம். தற்போது பெய்து வரும் தொடர்மழையால் சுரங்க பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வருவோர் 5 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து கொத்தப்புளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரெங்கசாமி, வேலுச்சாமி எம்பியிடம் புகார் அளித்தார். இதன்பேரில் எம்பி, ரயில்வே சுரங்க பாதையை ஆய்வு செய்து, மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார். உடன் கொத்தப்புளி ஊராட்சிமன்ற செயலர் செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன் மற்றும் கிராமமக்கள் இருந்தனர்.

Tags : railway tunnel ,Kothappulli Poovodai ,
× RELATED கத்தி முனையில் மிரட்டி வடமாநில...