அனுமன் ஜெயந்தியையொட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

சின்னாளபட்டி, ஜன. 13: சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அதிகாலையில் மகா சுதர்சன ஹோமம், சதஸ்ர நாம ஹோமம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகமும், 108 இளநீர் அபிஷேகமும், 16 வகை திரவிய அபிஷேகமும் நடந்தது. பின்னர் சுவாமிக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றிய பட்து கொண்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் பாலசமுத்திரம் வீரஆஞ்சநேயர், பாலாறு அணை, கரடி கூட்டம் ஆஞ்சநேயர், திண்டுக்கல் மலையடி அபயவரத ஆஞ்சநேயர், கடைவீதி வீரஆஞ்சநேயர், மலைமேல் ஆஞ்சநேயர், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர், தாடிக்கொம்பு, என்எஸ்நகர், நாகல்நகர் ஆஞ்சநேயர், நத்தம் கோவில்பட்டி வீரஆஞ்சநேயர், குஜிலியம்பாறை கம்புளியம்பட்டி அனுமந்தபுரம் அபயவரத ஆஞ்சநேயர் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>