×

தியாக தீரர்கள் மறுவாழ்வுக்கு கொடிநாள் நிதி அளிப்பது நம் அனைவரின் கடமை: முதல்வர் பதிவு

சென்னை: தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கு கொடிநாள் நிதி அளிப்பது நம் அனைவரின் கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆயுதப்படை கொடி நாளில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்!.

மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Flag Day ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Tamil Nadu ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்