காங். மாநில செயலாளராக தீபிகா அப்புக்குட்டி நியமனம்

திருப்பூர், ஜன.13: தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மற்றும் பிரியதர்ஷினி காங்கிரசுக்கு நிர்வாகிகளை மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் நியமனம் செய்து அறிவித்துள்ளார். அதன்படி, மாநில மகளிர் அணி காங்கிரஸ் செயலாளராகவும், தமிழ்நாடு பிரியதர்ஷினி காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் திருப்பூர் தீபிகா அப்புக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளார். பி.எல். ஹானர்ஸ் படிக்கும்  தீபிகா அப்புக்குட்டிக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறைதிருப்பூர், ஜன.13:திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28ம் தேதி வள்ளலார் நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற பார்கள் மூடப்பட்டு, மது விற்பனை செய்ய கூடாது. அவ்வாறு, மூடாமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>