×

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?: நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி

சென்னை: எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” என்று நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நேற்று பேட்டியளிக்கும் போது, “அயோத்தி, இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை” என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா? கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Ayodhya ,Tamil Nadu ,Nayinar Nagendran ,Chennai ,Kanimozhi M. B. ,BJP ,UK ,Europe ,India ,
× RELATED தரம் தாழ்ந்த அரசியல்வாதிகளால் எங்களை...