வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

ஈரோடு, ஜன. 13:  ஈரோடு வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்  செய்தனர்.  ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதன்படி, அனுமன் ஜெயந்தியான நேற்று அதிகாலை 3 மணிக்கு மகா கணபதிக்கு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. இதையடுத்து அதிகாலை 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனமும், காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை சாற்றுதல், மாலை 5 மணிக்கு வெள்ளிகவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் படி, நடப்பாண்டு சுவாமி திரு வீதி உலா, தேர் இழுத்தல், வியாபார கடைகள் அமைப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் அனுமதிக்கவில்லை.    இதனால், நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமரை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை ஆய்வு செய்யப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதித்தனர்.

Related Stories:

>