பல்வேறு வகையில் பிரசாரம் செய்தாலும் சட்டமன்ற உறுப்பினராக கூட கமல்ஹாசன் ஆக முடியாது

அந்தியூர், ஜன. 13:  தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் பிராசரம் செய்தாலும், கமல்ஹாசன் சட்டமன்ற உறுப்பினராக கூட வெற்றி பெற போவதில்லை என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பட்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ரூ.2.17 கோடி  மதிப்பிலான அடிப்படை வசதிகளுக்கான திட்டப்பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:போகிப் பண்டிகையை மாசு இல்லாத வகையில் தமிழக மக்கள் கொண்டாட சுற்றுச்சூழல் துறை சார்பில், விழிப்புணர்வு வாகன பேரணி நேற்று முதல் முதல் துவங்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பவானி ஆறு மாசடைந்து இருப்பதை கமல்ஹாசன் சுத்தம் செய்வதாக கூறியிருப்பது, வரவேற்புக்கு உரியது. தமிழகம் முழுவதும் அவர் பிரசாரம் மேற்கொண்டாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் கமல்ஹாசன் சட்டமன்ற உறுப்பினராக கூட வெற்றி பெறப் போவதில்லை. வீடு வீடாக ரேஷன் பொருள் கொடுக்கப்படும் என்று சொன்னவர்கள் நிலைமைதான் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏற்படும். இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். அப்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணபவா, பட்லூர் கூட்டுறவு வங்கி தலைவர் சசி, ராசு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>