மதுபான கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

கடலூர், ஜன. 13: கடலூர் மாவட்டத்தில், மதுபான கடைகளை 3 நாட்கள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் 28ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்களுக்கு மாவட்டத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடியிருக்க வேண்டும்.  மேலும் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் 3 தினங்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதனை மீறி மதுபானங்கள் விற்றாலோ, மது அருந்தும் கூடங்கள் திறந்து வைத்திருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>