×

அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்

ஆட்டையாம்பட்டி, ஜன.13: ஆட்டையாம்பட்டி அடுத்து காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில்,அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக பால், மோர், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து 1008 வடை மாலை சாத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். கோயில், சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இடைப்பாடி: இடைப்பாடி உள்ள முகரை நரசிம்ம பெருமாள் கோயிலில், 17 அடி உயர ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து நீண்ட வரிசையில் சுவாமியை வழிபட்டனர்.இதேபோல் வீரப்பம்பாளையம் திம்மராய பெருமாள் கோயிலில், அனுமனுக்கு 10 ஆயிரம் வடை மாலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அரசிராமணி பேரூராட்சியில் உள்ள வெல் ஊற்று பெருமாள் கோயிலிலும் வடை மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags : celebration ,Hanuman Jayanti ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்