ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போதையில் மயங்கி கிடந்த மூதாட்டி வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு

ராசிபுரம், ஜன.13: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள கடை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கிக்கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள், முதாட்டியை மீட்டு, உறவினர்களை வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளங்களில், ரேஷன் கடையில் வழங்கிய ₹2,500, டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசு கஜானாவுக்கே வந்துவிட்டது என்ற தலைப்பில் மூதாட்டி மயங்கி கிடந்த வீடியோ வெளியாகியது. ் சம்பவ இடத்துக்கு மூதாட்டியின் உறவினர்கள் வந்த பின்புதான் தெரிந்தது, மூதாட்டி கட்டட வேலை செய்பவர் என்றும், மாலை வேலை முடிந்ததும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும், அன்றைய தினம் அருகில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திய மூதாட்டி, போதையில் வீட்டுக்கு செல்ல முடியாமல், வழியில் கடை அருகே மயங்கி விழுந்துள்ளார் என்பதும்.

இதையடுத்து தண்ணீரை மூதாட்டியின் முகத்தில் தெளித்து, அவரை எழுப்பி கைதாங்கலாக வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதை பார்த்துக்கொண்டிருந்த சிலர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்களில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி உள்ளது.

Related Stories:

>