கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணம்

ராசிபுரம்,ஜன.13: பொங்கல்  பண்டிகையையொட்டி நாளை (14ம்தேதி) துவங்கி, 17ம் தேதி வரையிலும், மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி, ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டிகளை சமூக  நலத்துறை அமைச்சர் சரோஜா துவக்கி வைக்கிறார். இந்நிலையில் நேற்று போட்டிகளை  நடத்தும் கிரிக்கெட் குழுவிற்கு ₹6 ஆயிரம் மதிப்புள்ள கிரிக்கெட் பேட்,  பந்து, ஸ்டெம்ப் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் சந்திரன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>