×

அனுமன் ஜெயந்தி விழா

தர்மபுரி, ஜன.13: அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் மன்றோ ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், ஜெயவீர ஆஞ்சநேயர் 3008வடைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆட்டுக்காரன் பட்டியில் உள்ள 300ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயா கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா, 18வது ஆண்டாக நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 12 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்காரமும் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. விழாவில் ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி மின்வாரிய அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10 மணிக்கு உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  தொப்பூர் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில்
அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி ஸ்ரீ வீர வீர ஆஞ்சநேயர் கோயிலில், அதிகாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் கோவிந்தன், மல்லிகா அன்பழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். இதேபோல், அருணேஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, மணிகட்டியூர் ஆஞ்சநேயர் கோயில், பாலக்கோடு ரோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதேபோல், அரூர் மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஓம்ஸ்ரீஅனுகிரக அஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலக்கோடு: அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, மாரண்டஅள்ளி, சி.எம்.புதூர், ரயில்வே ரோடு, சந்திராபுரம், கல்லாகரம், அகரம், பஞ்சப்பள்ளி சின்னார் அணை, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சி.எம். புதூரில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தி விழாவில் சுாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Hanuman Jayanti Festival ,
× RELATED அனுமன் ஜெயந்தி விழா