அனுமன் ஜெயந்தி விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பந்தியூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியான நேற்று மூலவர் ஆஞ்சநேயருக்கு 65 ஆயிரம் வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல், திருவள்ளூர் பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில் உள்ள 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோயிலிலும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இக்கோயில்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>