×

சாலை விரிவாக்க பணிக்கு கடைகள், குடியிருப்பு அகற்றம்: பொதுமக்கள் சாலை மறியல்; பூந்தமல்லி அருகே பரபரப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் இருந்து மேப்பூர் வரை செல்லும் சாலை வரை 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இதன் இரண்டு புறங்களிலும் கடைகள் மற்றும் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் இந்த சாலை, குன்றத்தூர், மலையம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகள் நடத்த வேண்டும் என இதன் அறிக்கையை வரும் 18ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை நேற்று கொண்டு வந்து சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஆக்கிரமிப்பை அகற்றலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் பூவை ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் ரவி தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் சாலையை ஒட்டி முன்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அந்த வாகனங்களை சிறைபிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

Tags : Shops ,road ,Stir ,block ,Poonamallee ,
× RELATED சென்னை நாவலூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து