×

பிரமோற்சவ விழாவின் 4ம் நாள் ரத்தின அங்கி சேவையில் வீரராகவர் காட்சி தந்தார்

திருவள்ளூர்: தை பிரமோற்சவ விழாவின் 4ம் நாள் மற்றும் அமாவாசை தினமான நேற்று திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளக்கரையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். திருவள்ளூரில் மிகவும் பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. வைத்திய வீரராகவர் என அழைக்கப்படும் இக்கோயிலில், அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
அதன்படி நேற்று அமாவாசை என்பதால் நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கோயில் வளாகம் மற்றும் மண்டபங்களில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் நேற்று அதிகாலை கோயில்  குளக்கரையில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் கோயிலுக்குள் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். பிரமோற்சவ விழாவின் 4ம் நாளான நேற்று அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை ரத்தின அங்கி சேவையில் உற்சவர் வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : ceremony ,player ,Pramorsava ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா