×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம், செங்கல்பட்டு அருகே திம்மராஜபுரம் கணையாழி ஆஞ்சநேயர், கல்பாக்கம் அருகே  பெருமாள்சேரி பக்த ஆஞ்சநேயர், மாமல்லபுரம் பக்த ஆஞ்சநேயர், திருப்போரூர் அருகே புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் ஆகிய ஆலயங்களில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

இதேபோல் முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பின்புறம் 18 அடி உயர பிரசன்ன ஆஞ்சநேயர், ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அருகில் உள்ள வீர ஆஞ்சநேயர், உத்திரமேரூர் அடுத்த மருதத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு ஸ்ரீவீர ஆஞ்சநேயர்,  செங்கல்பட்டு அடுத்த தேவனூர் ஆஞ்சநேயர் கோயில், நெய்குப்பி ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கோயில்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றியும், நெய் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Hanuman Jayanti ,festival ,districts ,Kanchipuram ,Chengalpattu ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!