×

டிசம்பர், ஜனவரி மாத உற்சவத்தின்போது ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய உற்சவங்களின்போது விஐபிக்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நடப்பு மாதம் (டிசம்பர்) மற்றும் வரும் ஜனவரி மாதங்களில் திருமலையில் நடைபெற உள்ள பல்வேறு உற்சவங்களின்போது விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி வரும் 23ம்தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம், 29ம்தேதி வைகுண்ட ஏகாதசிக்கு முன்தினம், 30ம்தேதி முதல் ஜனவரி 8ம்தேதி வரை 10 நாட்கள் வைகுந்த வாயில் தரிசனம் மற்றும் 2026ம் ஆண்டு ஜனவரி 25ம்தேதி ரதசப்தமி ஆகியவை நடைபெற உள்ளது.

எனவே, இந்த நாட்களில் புரோட்டோக்கால் வி.ஐ.பி. பிரமுகர்களை தவிர, மேற்கூறிய நாட்களின் முந்தைய நாட்களில் விஐபி தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tags : Ezhumalaiyan Temple ,Tirumala ,Tirupati Ezhumalaiyan Temple ,
× RELATED 25 உயிர்களை காவு வாங்கிய கோவா நைட்...