பொங்கல் தொகுப்பு வழங்கக்கோரி சிஐடியூ ஆட்டோ டிரைவர்கள் பொங்கல் வைத்து போராட்டம்

திருச்சி, ஜன. 13: நலவாரியம் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. நலவாரியத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சேர தகுதியிருந்தும் குறைவான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் கட்டுமான வாரியத்தில் நிதி இருப்பதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு உபகரணங்கள், பொங்கல் தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. இதுபோல் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் உபகரணங்கள், பொங்கல் தொகுப்பு வழங்க வலியுறுத்தி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நலவாரியம் முன் நேற்று சிஐடியூ ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் மணிகண்டன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் அவர்களது கோரிக்கை மனுவை நலவாரிய உதவி ஆணையரிடம் வழங்கினர். போராட்டத்தையொட்டி நலவாரியம் அலுவலகம் அருகே கன்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories:

>