×

பொக்லைன் டிரைவர் தற்கொலை

புவனகிரி, டிச. 6: பரங்கிப்பேட்டை அருகே உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்மந்தம்(40). பொக்லைன் டிரைவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த திருஞானசம்மந்தம் வீட்டிலேயே துாக்கில் தொங்கினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு திருஞானசம்மந்தம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pokline ,Bhuvanagiri ,Thirugnanasammantham ,Thillaividangan village ,Parangipettai ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் மாயம்