குழாயில் பழுது இன்று குடிநீர் விநியோகம் கட்

திருச்சி, ஜன. 13: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கம் கோட்டம், கோட்டை ஸ்டேஷன் சாலையில் குடிநீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று (13ம் தேதி) பெரிய கடைவீதி, பாபு ரோடு, கீழப்புலிவார்டு ரோடு, ஜாபர்ஷா தெரு, கள்ள தெரு, மேலரண் சாலை, மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு, சிங்காரதோப்பு, தாராநல்லூர், ராணி தெரு, பெரிய சவுராஷ்டிரா தெரு, சுண்ணாம்புக்கார தெரு, சமஸ்பிரான் தெரு, கம்மாள தெரு, அலங்கநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>