×

பெரம்பலூரில் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு பாிசோதனை

பெரம்பலூர்,ஜன.13: பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்று வரும் முதற்கட்ட மாதிரி வாக்குபதிவு பரிசோதனையினை நேற்று பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 1,072 கட்டுப்பாட்டு கருவி கள், 1,414 வாக்குப்திவு இயந்திரங்கள், 1,162 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 3,648 இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் கடந்த 29ம்தேதி முதல் தொடர்ந்து  3 நாட்கள் பெல் நிறுவன பொறியாளர்களை  கொண்டு முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்ப ட்டன.அதனடிப்படையில் 1,409 வாக்குப்திவு இயந்திரங்களும், 1,039 கட்டுப்பாட்டு கருவிகளும் 1,108வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்கள் எனமொத்தம் 3,556 இயந்திரங்கள் சரியான முறையில் இயங்க கூடிய இயந்திரங்கள் என க ண்டறியப் பட்டது.

இதில் 5 சதவீத இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் கணினி முறையில் சுழற்சி வழியாக 52 வாக்குப்திவு இயந்திரங்களும், 52கட்டுப்பாட்டு கருவிகளும் 52 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்திவு நடைபெறுகிறது. மாதிரி வாக்குப்திவு முடிவுற்ற பின்னர் பதிவான மாதிரி வாக்குகள் சரிபார்க்கப்ப டும். அதனை தொடர்ந்து மாதிரி வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட இயந்தி ரங்களை பாதுகாப்பான முறையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.இப்பணிகளை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய் தார்.நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சப்.கலெக்டர் பத்மஜா,நேர்முக உதவியா ளர் பாரதிவளவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரநிதிகள்  கலந்து கொண்டனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...