கலெக்டர் ஆய்வு கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தா.பழூர், ஜன.13: தா.பழூரிலிருந்து காரைக்குறிச்சி, முத்துவாஞ்சேரி வழியாக அரியலூர் செல்லும் பாதையில் அருள்மொழி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரதான சாலையில் அறங்கோட்டை கிராமத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி செல்லும் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 4 மாத காலமாக சாலையில் குடிநீர் வீணாகி ஓடி வருகிறது. இதனால் சாலை முழுவதும் தண்ணீர் நிரம்பி சாலை வீணாவதுடன், அருகில் உள்ள வீட்டின் சுவர்களும் சேதமாகி உள்ளது. குடிநீர் ஓடி சுவர் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் குடிநீர் வீணாகி அதில் தொற்று உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பற்றி அக்கிராம மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

Related Stories:

>