×

மழைக்காலத்தில் மட்டுமே பாகிஸ்தானுக்கு நதி நீர் – ஒன்றிய அரசு

டெல்லி : சட்லஜ், பியாஸ் நதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் | அதிக மழைப் பொழிவால் வெள்ளம் ஏற்படும் பருவமழைக் காலத்தைத் தவிர வேறு எப்போதும் அந்த நதிகளில் உபரிநீர் பாகிஸ்தானுக்குத் திறந்துவிடப்படாது என்று மக்களவையில் ஒன்றிய இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயரும்போது பாதுகாப்புக்காக மட்டுமே உபரி நீர் வெளியேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pakistan ,EU government ,Delhi ,Satlaj, Piaz ,Union Minister ,Lok Sabha ,Pahalkam ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...