அரசு இடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா: ஆர்டிஓ ஆய்வு

தண்டராம்பட்டு, ஜன.13: அரசு இடத்தில் குடியிருக்கும் வீட்டினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு ஆர்டிஓ ஆய்வு செய்தார். தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம், பெருங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் அரசு இடத்தில் நீண்ட நாட்களாக வீடு கட்டி வரும் நபர்களுக்கு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று தகுதியான நபர்கள் வீட்டினை ஆர்டிஓ தேவி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பயிற்சி துணை ஆட்சியர் அஜிதாபேகம், தாசில்தார் மலர்கொடி, வருவாய் ஆய்வாளர்கள் சின்னப்பராஜ், கஸ்தூரி, சர்வேயர் உமாநாத், விஏஓ வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தண்டராம்பட்டு அடுத்த பி.குயிலம் கிராமத்தில் அரசு இடத்தில் நீண்ட நாட்களாக வீடு கட்டி வரும் வீட்டினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆர்டிஓ தேவி ஆய்வு செய்தார்.

Related Stories:

>