வைகுண்டம் அருகே கல்குவாரியில் வாலிபர் மர்ம சாவு

வைகுண்டம், ஜன.13: வைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டி அடைக்கலாபுரத்தில் உள்ள கல்குவாரி குளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக வைகுண்டம்  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்பி ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின்  தலையில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது  அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி ஜெயக்குமார்  தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இறந்தவர் யார் என ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி  வெங்கடேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள்  சுரேஷ்குமார்,  வசந்த் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்தவர் ஏரல் அருகே பட்டாண்டிவிளையை சேர்ந்த  பாண்டியராஜன் மகன் முத்துசெல்வன் (18) கூலித்தொழிலாளி என்பதும், மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து கல்குவாரியில் போட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

முன்விரோதம் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>