சிறந்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் உடன்குடி யூனியன் சேர்மன் வாழ்த்து

உடன்குடி, ஜன.13: சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்ற உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்றார். கொரோனா தொற்று பேரிடர் காலங்களில் சிறந்த முறையில் பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அமெரிக்கன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து வருகிறது. சென்னையில் நடந்த விழாவில் சிறந்த முறையில் மக்கள் சேவை, சமூக சேவை புரிந்ததற்கு உடன்குடி ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங்கிற்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

இதனையடுத்து தண்டுபத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் பட்டத்தை வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட வர்த்தக அணி துணைஅமைப்பாளர் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், நகர செயலாளர் ஜாண்பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய் உடனிருந்தனர்.

Related Stories:

>