மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

வி.கே.புரம், ஜன. 13:  வி.கே.புரம் மதுரா கோட்ஸ் சார்பில் அம்பை அரசு மருத்துவமனைக்கு  பொது மக்களின் பயன்பாட்டிற்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. வி.கே.புரம் மதுரா கோட்ஸ் நிறுவனம் தனது சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மற்றும் மருத்துவமனைக்கு பயன்படக்கூடிய மருத்துவ உபகரணங்களை ஆலை உற்பத்தி இயக்குநர் பிரபிர்சக்ரபோத்தி அம்பை தீர்த்தபதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கடாசலத்திடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பொது மேலாளர் ரங்கநாதன், ஆலை மேலாளர் ராஜேந்திரபிரசாத், தொழிழியல்  உறவு மேலாளர் சூரியபிரபா, மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: