நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளை அமுதா நியமனம்

திசையன்விளை, ஜன. 13:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின் பேரில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவியாக திசையன்விளையை  சேர்ந்த அமுதா கார்த்திகேயனை மகளிர் காங்கிரஸ் மாநில தலைவரான வக்கீல் சுதா ராமகிருஷ்ணன் நியமித்தார்.   இதையடுத்து அமுதா கார்த்திகேயனுக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பேரூராட்சி  தலைவருமான சேம்பர் செல்வராஜ் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

இதை ஏற்றுக்கொண்ட அமுதா, அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சுயம்புராஜன், வணிகர் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தங்கையா  கணேசன், விவசாய அணி மாநில செயலாளர் விவேக் முருகன், நகரத்தலைவர் ராஜன்,  செயலாளர் சங்கர், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மருதூர் மணிமாறன்,  துணைத்தலைவர் விஜயபெருமாள், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பொன்ராஜ்,  அந்தோனிராஜ், விஜயகுமார், சேவியர், ஜெயராணி, லட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட மகளிர் அணி தலைவர் அமுதா  விவசாய அணி மாநில செயலாளர் விவேக் முருகனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>