×

திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி பகுதிகள் பயன்பெற மணிமுத்தாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க தேமுதிக கோரிக்கை

நெல்லை, ஜன. 13: தேமுதிக புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயபாலன், கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியான ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி ஆகிய தாலுகாவை சேர்ந்த மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்க முன் வாழை, தென்னை, வெற்றிலை, கத்தரிக்காய் உள்ளிட்ட பணப்பயிர்களை பயிரிட்டு வாழ்வாதாரத்தை வளப்படுத்திக் கொண்டனர்.

ஆனால் தற்போது இந்த தாலுகாக்களில் நிலத்தடி நீருடன் கடல் நீர் கலந்து விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் விவசாய பணிகளை விடுத்து வெளிமாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர். மீதி உள்ள விவசாயிகள் மழையையும், அதிகாரிகளையும் நம்பி உள்ளனர். இந்த பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குளங்கள் நிரம்பவில்லை. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பும் வகையில் மணிமுத்தாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Temujin ,irrigation canal ,Manimuttaru ,areas ,Nanguneri ,Thisayanvilai ,
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்