ஏபிஏ கல்லூரி மாணவருக்கு நெல்லை கலெக்டர் பாராட்டு

நெல்லை, ஜன. 13:  நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கல்லூரி மாணவரை கலெக்டர் விஷ்ணு பாராட்டினார்.

 கடந்த 2020ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் அகில இந்திய அளவில் ‘கேலோ  இந்தியா’ விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் நீச்சல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நெல்ைல மாவட்டம் வாகைகுளம்  அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கல்லூரி மாணவர் சேது மாணிக்க வேலுவை நெல்லை கலெக்டர் விஷ்ணு காசோலை வழங்கிப் பாராட்டினார். அப்போது  மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஸ், பயிற்றுநர் கர்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  இதே போல் சாதனை படைத்த மாணவரை கல்லூரிச் செயலாளர் திருமாறன், கல்லூரி முதல்வர் ஆனந்த் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.

Related Stories:

>