மணல் கடத்திய வாலிபருக்கு வலை

ஒடுகத்தூர், ஜன.12: ஒடுகத்தூர் அருகே பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். அணைக்கட்டு தாலுகா அகரம் ஆற்றில் மணல் கடத்துவது தொடர்கதையாக உள்ளது. மேலும், வேப்பங்குப்பம் போலீசாருக்கு அகரம் ஆற்றில் மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தினர். இதைப்பார்த்த மாட்டு வண்டியில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்ததில், மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில், அகரம் காலனி பகுதியை சேர்ந்த முனிசாமியின் மகன் கிட்டு என்கின்ற விக்னேஷ் மணல் கடத்தியது தெரிந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அதனால் தேடப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது மணல் கடத்தியதாக வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>