×

சென்னையில் தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்

சென்னை: தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளரின் செய்தி குறிப்பில்:
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், டிசம்பர் மாதத்தின் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம். தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி. க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Mother-Manavar Scheme ,Chennai ,Chennai Zonal Cooperatives ,
× RELATED கருங்கல் அருகே இரவில் பரபரப்பு;...