×

தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூரில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் 100 முதல் 120 பேர் வரை பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை ஆணையிட்டது. 3 நாட்களுக்கு மேல் அதீத காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

Tags : Tamil Nadu ,Public Health Department ,Chennai ,Coimbatore ,Thanjavur ,Cuddalore ,Madurai ,Vellore ,Tamil Nadu… ,
× RELATED வனத்துறை சார்பில் முதுமலையில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு