காவல்நிலைய பணிக்கு ஆயுதப்படை காவலர்கள் 109 பேர் இடமாற்றம்

தூத்துக்குடி,ஜன.12: தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 109 காவலர்கள் கடந்த 01.11.2020 அன்று தாலுகா காவலர்களாக நியமனம் செய்து, அவர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி  உட்கோட்டத்திற்கு 8, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 15 , மணியாச்சி உட்கோட்டத்திற்கு 14 , கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு 22 , சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு 11 , வைகுண்டம் உட்கோட்டத்திற்கு 9 , திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு 15 , விளாத்திக்குளம் உட்கோட்டத்திற்கு 15 என  மொத்தம் 109 காவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு காவல் நிலையங்களில் புதிதாக பணியேற்க உள்ள காவலர்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அறிவுரை கூறி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதற்கான நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிகள் கோபி, செல்வன், டிஎஸ்பி கண்ணபிரான், இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து, ஜாஹிர்உசேன், எஸ்ஐகள் ஈஸ்வரமூர்த்தி, மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>