×

பாவூர்சத்திரத்தில் செயற்குழு கூட்டம் தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் தெற்கு மாவட்ட திமுக வலியுறுத்தல்

பாவூர்சத்திரம், ஜன.12: கிடப்பில் போடப்பட்ட தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பாவூர்சத்திரத்தில் நடந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
   தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் செல்லப்பா தலைமையில் பாவூர்சத்திரத்தில் நடந்தது. மாவட்ட  பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ஜெயக்குமார், சண்முகையா, பொதிகை  சில்ஸ் மகபூப் மீரான், சுப்பிரமணியன், மாரிமுத்து, ராஜதுரை, மேகநாதன்,  கண்ணன்,  ஜேசுராஜன், சமுத்திர பாண்டி, ரவீந்திரகண்ணன்  முன்னிலை வகித்தனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கல்லூரணி சீனித்துரை வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன், பூங்கோதை எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில்,  ராமநதி  ஜம்புநதி மேல்நிலை கால்வாய் திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட தென்காசி- நெல்லை 4 வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி விளையாட்டு போட்டிகள் நடத்துவது.

 தென்காசி  தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தலைவர்  ஸ்டாலின்  அறிவிக்கும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்  செய்வது  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை  மாவட்ட அமைப்பாளர் எழில்வாணன், ஒன்றியச்  செயலாளர்கள் சிவன் பாண்டியன், கடற்கரை, ராஜா, கிறிஸ்டோபர், சேர்மத்துரை,  செல்லத்துரை, அன்பழகன், அழகுசுந்தரம், செல்லத்துரை, மாரி வண்ணமுத்து,  குமார், நகரச் செயலாளர்கள் சாதிர், சங்கரன், பேரூர் செயலாளர்கள் மந்திரம்,  சுடலை, முத்தையா, ஜெயபாலன், ஜெகதீசன், மாரியப்பன், நெல்சன், பவுல்,  லட்சுமணன், பொன் சுந்தரம், அணி அமைப்பாளர்கள் ரவிச்சந்திரன், சுப்பையா,  கோமதிநாயகம், சேக் முகமது, புனிதா மகேஸ்குமார், சரவணன், குட்டி,  சங்கரநயினார், வைத்தீஸ்வரி மற்றும் சாக்ரடீஸ், கபில், செல்வன், விஜயன்,  வைரசாமி, காந்திராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.

Tags : DMK ,Southern District ,Tenkasi ,corridor ,Nellai 4 ,
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...