ஆந்திராவில் எருதாட்டத்திற்கு தடை காளைகளுடன் வந்தால் நடவடிக்கை எல்லை பகுதியில் முகாமிட்டு போலீசார் எச்சரிக்கை

வேப்பனஹள்ளி, ஜன.12: ஆந்திர மாநிலத்தில் எருதாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக வரும் வாட்ஸ்அப் தகவலை நம்பி ஆந்திராவிற்கு எருதுகளை கொண்டு வரவேண்டாம் என ஆந்திர மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள காளை உரிமையாளர்கள் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு காளைகளை கொண்டு சென்று எருதாட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம். ஆந்திராவில் ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் எருதாட்டத்திற்கு அனுமதியளித்துள்ளதாகவும், தமிழர்கள் தங்களது எருதுகளுடன் விழாக்களில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்து வாட்ஸ்அப்பில் தகவல் வெளியாகியுள்ளது.  இதையறிந்த ஆந்திர மாநில போலீசார், ஆந்திர மாநிலத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் எருதாட்டத்திற்கு தடை நீடிப்பதால் வாட்ஸ்அப் தகவலை நம்பி யாரும் ஆந்திர மாநிலத்திற்குள் எருதுகளை கொண்டு வர வேண்டாம் என எல்லை பகுதியில் முகாமிட்டு தெரிவித்து வருகின்றனர். இதை மீறி எருதுகளை கொண்டு வந்தால் பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குப்பம் புறநகர் இன்ஸ்பெக்டர் யதீந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>