வாணியாறு அணையில் இருந்து உபநீர் திறப்பால் 200 ஏக்கரில் பயிர் நாசம் இழப்பீடு வழங்க தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கோரிக்கை

தர்மபுரி, ஜன.12: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேணடுமமென தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை 65 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் மழையால் 63 அடி நீர்நிரம்பியுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த உபரிநீர் வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, ஒந்தியாம்பட்டி ஏரி, தென்கரைக்கோட்டை ஏரியை நிரப்பி, அரூர் பகுதியில் உள்ள ஏரி நோக்கி செல்கிறது. மேலும், அறுவடை தயாராக இருந்த  நெல் வயல்களுக்குள் புகுந்ததால், சுமார் 200 ஏக்கரில் பயிர் நாசமடைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>