மாநகர கமிஷனர் தகவல் கூத்தைப்பாரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும்

திருச்சி, ஜன.12: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கூத்தைப்பார் கிராம கமிட்டி சார்பில் மக்கள் மனு அளித்தனர். அதில் கூத்தைப்பார் கிராமத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டு மார்ச் 12ம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடு செய்வோம் என்று என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பருவநிலை மாற்றத்தால் பெய்யும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் வயலிலே சாய்ந்து கிடக்கிறது. அந்த நெற்பயிர்களில் இருந்து நெல்மணிகள் முளைவிட தொடங்கி விட்டன.

மேலும் மானாவாரி பகுதியில் பயிர் செய்த பருத்தி, மக்காச்சோளம், கடலை, மிளகாய் போன்ற பயிர்கள் அழுகிவிட்டன.

Related Stories:

>