நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக குழு கூட்டம்

திருவாரூர், ஜன.12: திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நிர்வாக குழு கூட்டம் தலைவர் கலியபெருமாள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மேலாண்மை இயக்குனர் பாத்திமாசுல்தானா, பொது மேலாளர் காளிதாஸ் மற்றும் இயக்குனர்கள் சின்னராஜ், சுரேஷ்குமார், செந்தில்குமார், சந்திரகுப்தன், ராஜாமணி, மனோகரன், இளங்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 ரொக்கம் மற்றும் பொருட்களை வழங்கிய தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வது, பண்டகசாலையின் பொதுப்பேரவை கூட்டத்தை விரைவில் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மறைந்த ஊழியர் இந்திராதேவி என்பவரின் மகன் அருண்குமார் என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை தலைவர் கலியபெருமாள் வழங்கினார்.

Related Stories:

More
>