கோயில்களில் உற்சவ விக்ரகங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு

பாபநாசம், ஜன.12: பாபநாசம் 108 சிவாலயம் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் உற்சவ விக்ரகங்களை மத்திய தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள திருவைக்காவூர் வில்வவனேசுவரர் கோயில், பாபநாசம் வங்காரம் பேட்டை நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில், பாபநாசம் அடுத்த ராஜகிரி கரை மேல் அழகர் அய்யனார் கோயில், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான உற்சவ விக்ரகங்களை மத்தியத் தொல் பொருள் துறை யினர் பதிவுச் செய்ய வேண்டி விண்ணப்பிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில் மத்திய தொல்லியல் துறையினர் கோயிலுக்கு வந்து உற்சவ விக்கிரகங்களை அளவீடுச் செய்து ஆய்வு மேற்க் கொண்டனர்.

Related Stories:

>